Tuesday, September 14, 2010

ஸ்பெக்ட்ரம் பூதமும், இளிச்சவாய் தமிழனும்!


“ஸ்பெக்ட்ரம் புகழ்” ராஜா எத்தனை மந்திர ஜாடிகளைக் கொண்டு வந்தாலும் ஸ்பெக்ட்ரம் பூதம் அதற்குள் அடங்க மறுக்கிறது.
என்ன செய்ய? மிகவும் சக்தி வாய்ந்த- பல கோடிகளை ஏப்பம் விட்டு பெருத்திருக்கிற பூதம் ஆச்சே! சுப்ரீம் கோர்ட், ராஜாவுக்கு அனுப்பி உள்ள நோட்டீஸ் இந்த பூதத்தை மீண்டும் கிளப்பி விட்டு விட்டது.

“ஸ்பெக்ட்ரம் ஊழலை சி.பி.ஐ. விசாரிக்கத் தொடங்கி ஒன்பது மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டபோதும், இன்னும் பெயர் தெரியாத அதிகாரிகள் மற்றும் பெயர் தெரியாத நபர்களுக்கு எதிராகத்தான் வழக்கு உள்ளது. அதுவும், சிறு குழந்தை கூட புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் உள்ள எண்ணற்ற ஆதாரங்கள் கையில் இருக்கும்போதும் சி.பி.ஐ. ஏன் இப்படி நடந்து கொள்கிறது என்று சுப்ரீம் கோர்ட் ஆச்சர்யப்பட்டுள்ளது. அனால், பொதுமக்களுக்கு எந்தவித ஆச்சரியமும் இல்லை... ஏனெனில், ஆளும் கட்சியின் ஏவல் நாயாக செயல்பட்டுத்தானே சி.பி.ஐ.க்கு பழக்கம்...!

சுமார் எழுபது ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்த பின்னரும், அதே துறையில் அதே மந்திரி நீடிப்பது உலகில் எங்கும் நடக்காத அதிசயம்... பதவியை விட்டு நீக்குவது இருக்கட்டும், குறைந்தபட்சம் அந்தத் துறையில் இருந்தாவது மாற்றினால்தானே விசாரணை ஒழுங்காக நடக்க ஏதோ கொஞ்சநஞ்ச வாய்ப்பு உண்டு. ஆனால், நேர்மையின் மறு வடிவமாக காட்டப்படும் பிரதமர் மன்மோகன்சிங், கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு இருக்கும் மர்மம் அந்த ஸ்பெக்ட்ரம் பூதத்திற்கு மட்டும்தான் தெரியும்.

ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காரணத்துக்கெல்லாம் அவர் கைது, இவர் கைது என்று தினம்தினம் செய்திகளைப் பார்க்கிறோம். ஆனால், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களின் ஒரு வருட பட்ஜெட் தொகையை ஒரே ஊழலில் சுருட்டிக்கொண்டு விட்ட ராஜாவுக்கு சுப்ரீம்கோர்ட் என்ன, சர்வதேச கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் வந்தாலும் பதவியை விட்டு அசையப் போவதில்லை. ஏனெனில், பதவி நாற்காலிதான் இப்போது அவருக்கு இருக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு.

அதற்கு ஆபத்து வந்தால், வீல்சேரில் டெல்லி சென்றாவது சோனியா அம்மையாரின் காலில் விழுந்தாவது ராஜாவின் பதவியைக் காப்பாற்றி விட்டு வந்து விடுவார், செம்மொழித் தமிழர்களின் தலைவர். ஆனால், காவிரி- முல்லை பெரியாறு போன்ற மாநில பிரச்சினைகளாகட்டும் அல்லது ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை விஷயமாகட்டும் ஒரு கடுதாசி எழுதி விட்டு கைவிரித்து விடுவார்.

தமிழன் இளிச்சவாயன்தானே... எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் நல்லவனாயிற்றே... இதையும் செய்வார்கள், இதற்கு மேலும் செய்வார்கள்...!

3 comments:

  1. ஒரு நகைச்சுவை வாசித்தேன்: காங்கிரஸ் தேமுதிகவுடன் கூட்டணி என்று அறிவிக்கிறது .ஏன் ? என்று அனைவரும் ஆச்சர்யப்படும் போது சோனியா சொல்கிறார் : எல்லா வோட்டிங் மெஷினிலும் காங்கிரசுக்கு ஆதராவாக வோட்டு விழுமாறு செய்தாகி விட்டது. பின்ன எதுக்கு திமுகவும் அதிமுகவும்.” என்று.

    ராசா மேலான ஊழல்கள் ஆதாரங்களால் 90% ஊர்ஜிதமானப் பிறகும் அவர் பதவியில் நீடிப்பதன் ஒரே காரணம் அதில் கட்சியில் மிக முக்கியமானவர்களுக்கு பலஙள் சென்றிருப்பது தான்.

    தமிழன் இளிச்சவாயன் தான். தினகரன் அலுவலகத்தில் பறி போன மூன்று உயிர்களையும் நாம் மறந்து தான் போகிறோம். மத்திய மந்திரிகள் அழகிரியும் தயாநிதியும் புகைப்படத்துக்காக சிரிக்கும் போது

    ReplyDelete
  2. பிரதமர் மன்மோகன் சிங்கை நேர்மையின் மறுஉருவம் என்பதெல்லாம் டுமச்.... அந்த ஆளு ஒன்னாம் நெம்பர் பிராடு

    ReplyDelete
  3. கருணாநிதி குடும்பம் இருக்கும் போது தமிழனுக்கு எதுவுமே கிடையாது...

    ReplyDelete