Thursday, September 16, 2010

நீதிபதிகளின் கைகளே நீளமா....?



மொரார்ஜி தேசாய் மந்திரிசபையில் சட்டத்துறை மந்திரியாக பதவி வகித்தவர், பிரபல வழக்கறிஞர் சாந்தி பூஷன். இந்திராகாந்திக்கு எதிராக ராஜநாராயணன் தொடர்ந்த வழக்கில் சாந்தி பூஷன் ஆஜராகி மிகத் திறமையாக வாதாடியதால் இந்திராகாந்திக்கு எதிராக தீர்ப்பு அமைந்து, அவரது தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துதான் அவசரநிலை பிரகடன சட்டத்தை கொண்டு வந்தார், இந்திராகாந்தி.
சமீபத்தில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இடையே நிலவும் லஞ்ச லாவண்யம் குறித்து தெகல்கா பத்திரிகையில் சாந்தி பூஷன் எழுதிய கட்டுரையைத் தொடர்ந்து அவர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
அதிரடிக்கு பெயர்போன சாந்தி பூஷன் இன்றைக்கு மீண்டும் ஒரு பரபரப்பை கிளப்பி இருக்கிறார். சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதிகள் 16 பேர் கொண்ட பட்டியல் ஒன்றை சமர்ப்பித்து உள்ளார். இதில் எட்டு தலைமை நீதிபதிகள் கண்டிப்பாக லஞ்சத்தில் ஊறித் திளைத்தவர்கள்; இரண்டு பேர் பற்றி சரியாகத் தெரியவில்லை; மீதம் ஆறு பேர் மட்டும் நேர்மையானவர்கள் என்று தெரிவித்து உள்ளார்.
இந்தப் பட்டியலை கொடுத்ததற்காக தன்னை சிறையில் தள்ளினாலும், அதையும் எதிர்கொள்ளத் தயார் என்று அறைகூவல் விடுத்துள்ளார், 85 வயதான இந்த சட்டப்புலி.
தங்கப்பதக்கம் திரைப்படத்தில் சிவாஜிகணேசன் கலங்கி நிற்கும்போது, அவரது மருமகளாக வேடத்தில் நடித்திருக்கும் பிரமிளா, “துன்பப்படுறவங்க எல்லாம் தங்களுடைய கவலையை தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க. அந்த தெய்வமே கலங்கி நின்னா, அந்த தெய்வத்துக்கு ஆறுதல் சொல்ல யாரால் முடியும்” என்பார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிகள் நிலையே இப்படி இருந்தால், ஸ்பெக்ட்ரம்- காமன்வெல்த் ஊழல்களை யாரிடம் போய் முறையிடுவது?

2 comments:

  1. கேள்விக்குறியோடுதான் ஒரு பதிவு முடியவேண்டுமென்று ஏதேனும் செண்ட்டிமெண்ட் சம்பிரதாயமிருக்கிறதா? :-). ஜனரஞ்சக நாளிதழும் வார இதழ்களும் அதிகம் படிப்பீர்களோ!? அதே பாணி தலைதூக்கியுள்ளதே. :-) தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. இது பற்றி எழுதி எழுதி நானும் அயற்சி ஆகிவிட்டேன்.
    :)

    http://govikannan.blogspot.com/2010/05/blog-post_12.html

    ReplyDelete