Friday, September 17, 2010

வெற்றிகள் இல்லாமல் விழாக்களா?? பூச்சாண்டி காட்டும் எந்திரன்....

சில வருடங்களுக்கு முன்னால் வரை தமிழ் சினிமாவின் பாதை மற்ற மாநில சினிமா ஆட்களுக்கு முன்னோடியாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழ்.
காலி பெருங்காய டப்பாக்கள்  எல்லாம் கல்லா கட்ட ஆரம்பித்திருக்கிறது விளம்பரங்களின் உத்தியால்.  நல்லவர்களுக்கு கிடைக்கும் மரியாதை  கெட்டவர்களுக்கும்   கிடைக்கும் போது ஒரு ஆதங்கம் ஏற்ப்படும் அல்லவா ? அதுதான் இது போன்ற சம்பவங்களில் நடக்கிறது.கூடவே அருவருப்பும்...

விளம்பரத்தால் விதியை கூட மாற்றி விடலாம் என்று தப்பு கணக்கு போடாமல் இருந்தால் போதும்.

வெளியாக போகிற எந்திரன் படத்திற்கான சித்து வேலைகள் எப்போதோ ஆரம்பமாகி விட்டது. எடுப்பது தமிழ் படம் என்றாலும் ஆங்கில படங்களுக்கு நிகரான வகையில் எடுக்க படுகிறது என்று விளம்பரம் வேறு....

பூனைக்கு எம்.எப்.ஹுசைன் வைத்து ஓவியம் தீட்டினால் புலியாக்கி விட முடியுமா என்ன ?

படத்துவக்க விழா, படப்பிடிப்பு முடிந்த விழா, பாடல் வெளியீட்டு விழா, பாடல் உருவான விழா, பின்னர் படம் எடுத்த விதம் பற்றிய விழா இப்படியே போய் விழா உருவான விழாவில் வந்து முடியலாம்.
இயக்குனர்களையும் கதாசிரியர்களையும் நம்பி பெரும்  வெற்றிகளை  குவித்த தமிழ் சினிமா, பின்னர் கதாநாயகன் , கதாநாயகி , காமெடியன்களை நம்பி எப்போதாவது வெற்றிகளை சந்தித்தது.
இப்போது அதையும் தாண்டி விளம்பரத்தை மட்டுமே நம்பி இடுப்பில் தாயத்து கட்டி கொண்டு இருக்கிறது.

சினிமாவில் புகழை மட்டுமே பார்த்துகொண்டிருந்த கூட்டம்  இப்போது காசையும் பார்க்க ஆரம்பித்தது தான் இந்த விபரீத போக்குக்கு காரணம்.

கார் நிறுத்த வேண்டிய இடத்தில் தேரை நிறுத்தினால் அதை நிறுத்தியவர்களுக்கு பெருமை கிடையாது. காரணம் பல பேர் இழுத்தால்தான் தேருக்கு பெருமை.
வெறும் விழாக்களை நடத்தி வெற்றிகளை தீர்மானிக்க முடியாது என்பதை நினைவில் கொண்டால் போதுமானது .

தமிழர்கள் எல்லோரும் சிறு வயதிலயே புலி வருது புலி வருது கதையை படித்தவர்கள்தான். அதனால் புலி வரும் போது கத்தினால்தான்  காப்பாற்றவாவது வருவார்கள் என்பது நாம் சொல்லாமலே புரிய வேண்டியவர்களுக்கு புரியும்....

காரணம்
எல்லாம் தெரிந்தவர்கள்தானே அவர்கள் ...கதை நன்றாக இருந்தால்தான் பாட்சா கூட வெற்றி அடையும்....இல்லாவிட்டால் பாபா கூட கந்தலாகும்... இத்தனை வருடம் சூப்பர்   ஸ்டார் பட்டத்தை தக்க வைத்திருப்பவருக்கு தெரியாத என்ன ?

5 comments:

  1. உங்களுக்கு இந்த post தேவையா. பூச்சாண்டி காட்டும் உங்கள் blog

    ReplyDelete
  2. உங்களை மாதிரி பூச்சாண்டிகளுக்கு பயபடாம இருக்ரதுக்காகத்தான் இந்த blog .

    ReplyDelete
  3. விதைப்பது எங்கள் வேலை....அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அறுவடையை பற்றி கவலை இல்லை

    ReplyDelete
  4. சும்மா பத்தி எரியுதே....இத இத இததான் எதிர்பார்த்தோம்

    ReplyDelete
  5. விளம்பரத்தின் மூலமும் விழாக்களின் மூலமும் தமிழ் சினிமா பந்தாடப்படுகிறதே

    ReplyDelete