Thursday, October 7, 2010

வாங்கும் சம்பளத்திற்கு வேலையை செய்ய எதற்கு ஆசீர்வாதம்?

“திருச்சி கலெக்டராக இருந்த சவுண்டையா, ஈரோடு கலெக்டராக மாற்றப்பட்டார். பொறுப்பு ஏற்பதற்கு முன்னர், முதல்வர் கருணாநிதியிடம் ஆசி பெற்றார்”
சமீபத்தில் பத்திரிகையில் படத்துடன் வெளிவந்த செய்தி இது. ஒரு கலெக்டர் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு மாறுதலாகி சென்று, பொறுப்பேற்தற்கு முன்பு முதல்வரிடம் ஆசி பெற வேண்டிய அவசியம் என்ன? இந்த மாவட்டத்தில் ரொம்ப அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தேன்... இப்போது மாற்றலாகி போகும் மாவட்டம் ரொம்ப செழிப்பானது; அங்கு போய் நன்றாக வலமாக வாழ எனக்கு ஆசீர்வாதம் தாருங்கள் என்கிறாரா?
சமீப காலமாக இந்தப் பழக்கம் மிகவும் அதிகமாகி விட்டது. இந்திய ஆட்சிப்பணி (ஐ.ஏ.எஸ்.) மற்றும் இந்திய காவல்துறை பணி (ஐ.பி.எஸ்.) என்பது மிகவும் முக்கியமான பணிகள் ஆகும். எந்தவித அரசியல் கலப்பும் இன்றி, விருப்பு- வெறுப்பு இன்றி, நாட்டின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயலாற்ற வேண்டிய இவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்களின் அடிவருடிகளாக செயல்படுவதற்கென்றே படித்து விட்டு வந்தவர்கள் போல செயல்படுவதை வெளிப்படையாக காட்டுவதுதான் இதுபோன்ற செயல்பாடுகள்.
ஒரு அதிகாரி, ஒரு பதவியில் நியமிக்கப்படுகிறார் என்னும்போது, அது அவர்களுடைய பணி தன்மையின் ஒரு பகுதிதான். ஆட்சியாளர்களிடம் சென்று ஆசீர்வாதம் வாங்குகிறார்கள் என்றாலே, அது அவர்களின் தயவில் பெற்ற பதவி என்பதும், அதன்மூலம் சட்டத்திற்கு புறம்பான ஏகப்பட்ட ஆதாயங்கள் காத்திருக்கின்றன என்பதை எல்லோருமே புரிந்து கொள்ளலாம்.
இப்போதெல்லாம், காவல் துறையில் எஸ்.பி. நிலை பதவிகளில் உள்ளவர்கள் கூட முதல்வரிடம் ஆசீர்வாதம் வாங்கும் புகைப்படங்கள் அடிக்கடி பத்திரிகைகளில் தென்படுகின்றன.
“நான் இதுவரை இருந்த பதவி அவ்வளவு பசை உள்ள பதவி இல்லை; இப்போது நல்ல செழிப்பான வருமானம் வரும் பதவி கொடுத்து இருக்கிறீர்கள்; அதற்கு நன்றி” என்று நமக்கெல்லாம் உணர்த்த விரும்புகிறார்களா? அல்லது, “எனக்கும் முதல்வர், துணை முதல்வரிடம் நன்கு அறிமுகம் உள்ளது” என்ற தனது சக அதிகாரிகளுக்கு சேதி சொல்ல விரும்புகிறார்களா? என்னவிதமான நோக்கம் இதில் அடங்கி இருக்கிறது?
இந்தப் பழக்கம் மிகவும் கேவலமான ஒன்று; அதனால் என்னிடம் இதுபோன்ற விஷயங்களுக்கு யாரும் வரக்கூடாது என்று முதல்வராவது சொல்ல வேண்டாமா? அதுசரி, தினசரி போட்டோ எடுத்து பத்திரிகைகளில் வெளியிடுவதைத் தவிர அவருக்கு வேறு என்ன வேலை இருக்கிறது?
நல்ல தேசம் இது....

5 comments:

  1. யாரும் வரக்கூடாது என்று முதல்வராவது சொல்ல வேண்டாமா?/////

    என்ன சார் இப்படி சொல்லிட்டிங்க , நல்ல வேலை வையமுத்துவ கூப்டு ஒரு சுய புகழ் கவிதை , அதோடு பிரபு தேவா டான்ஸ், அமைச்சர்கள் புடைசூழ ஒரு பங்கசன் (அதாங்க பேமிலி பங்கசன் )வைக்காம சிம்பிளா ஆசிர்வாதம் பண்ணிருக்காருன்னா நீங்க பெருமபடாம கோபபடுரிகளே, வெரி பேட்,வெரி பேட்

    ReplyDelete
  2. சார் உங்க காமன்ட்ல்ஸ் இருக்க Word verification எடுங்க , அதுனால ஒரு புண்ணியமும் இல்லை , கமண்ட்ஸ் போடுரவுங்கள டென்சன் ஆக்கும்

    ReplyDelete
  3. தமிழ் நாட்டில் எல்லாமும் கேடு கெட்ட விதமாகத்தான் நடக்கிறது... அது ஆட்சியாகட்டும், அதிகார வர்க்கமாட்டும் எதுவாக இருந்தாலும் இப்படித்தான்

    ReplyDelete